Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 7 டிசம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழும் சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் அடுத்தடுத்து நிரம்பி ஆச்சரியம் அளித்த நிலையில், தற்போது நீர்வரத்து குறைவால் நீர்மட்டம் சரிந்த வண்ணம் உள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த டிச 4 ஆம் தேதி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,141 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,619 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று (டிச 07) காலை நிலவரப்படி விநாடிக்கு 3937 கன அடியாக உள்ளது.
அணையின் நீர் மட்டம் 116.15 அடியாகவும், நீர் இருப்பு 87.462 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.
டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் வழியே விநாடிக்கு 1400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b