சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து
சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.) இந்தியாவில் முன்னணி விமான நிறுவனமாக இருந்து பல்வேறு நகரங்களுக்கும் இண்டிகோ சேவை கொடுத்து வந்த நிலையில், விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து பணியாளர் பற்றாக்குறையால் அந்த நிறுவனம
சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து


சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)

இந்தியாவில் முன்னணி விமான நிறுவனமாக இருந்து பல்வேறு நகரங்களுக்கும் இண்டிகோ சேவை கொடுத்து வந்த நிலையில், விமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து பணியாளர் பற்றாக்குறையால் அந்த நிறுவனமானது தவித்து வருகிறது.

இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக சுமார் 8 லட்சம் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 6 நாட்களில் 5,000 க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 650 இண்டிகோ விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இன்றும்

(டிச 08) விமான சேவை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணிகள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

நிர்வாக காரணமாக சென்னையில் இன்று (டிச 08) 38 புறப்பாடு, 33 வருகை என 71 விமான சேவை ரத்தாகியுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b