Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)
நடிகர் அஜித்குமார் தனது அஜித்குமார் ரேஸிங் அணி மூலம் பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் மலேசியாவில் நடந்த 24H creventic series பந்தயத்தில் கலந்து கொண்ட அஜித்குமார் அணி அவர்கள் பங்கேற்ற பிரிவில் 4வது இடம் பிடிந்து அசத்தியது.
அஜித்குமாரை காண ஏராளமான ரசிகர்கள் மலேசியாவில் திரண்டனர் நடிகர் சிம்பு உள்ளிட்டவர்களும் அஜித்தை சந்தித்தனர்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு அஜித்குமார் அறிவுரை வழங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் சத்தம்போட்ட ரசிகரை பார்த்து மற்ற அணிகளுக்கு தொந்தரவு செய்யாதீர்கள்.இது உங்களுக்கு மட்டுமல்ல எனது நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும்.. நான் எல்லோரிடமும் சென்று சொல்ல முடியாது.
நீங்களே அனைவரிடமும் சொல்லுங்கள் என்று கூறினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ