நேருவின் ஊழல் ராஜாங்கம், இந்த முறை திருப்பதிக்கு எவ்வளவு நன்கொடை தருவார் நேரு? - அதிமுக விமர்சனம்
சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச) திமுக அரசின் பொம்மை காவல்துறை கே.என்.நேரு விவகாரத்தில் இதையாவது விசாரிக்குமா? என அதிமுக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, திமுக அமைச்சர் கே.என்.நேருவின் அடுத்த ஊழல்
Adk


சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச)

திமுக அரசின் பொம்மை காவல்துறை கே.என்.நேரு விவகாரத்தில் இதையாவது விசாரிக்குமா? என அதிமுக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

திமுக அமைச்சர் கே.என்.நேருவின் அடுத்த ஊழல் குறித்து பொறுப்பு டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளது அமலாக்கத்துறை.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர்களில் தனது உறவினர்கள் வாயிலாக 7.5 - 10% வரை கமிஷன் கொள்ளை அடித்ததில், ரூ.1,020 கோடி மெகா ஊழல் நடந்திருப்பதாக அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சென்ற முறை, இதே துறையின் பணி நியமனங்களில் ரூ. 888 கோடி இமாலய ஊழல் செய்ததாக ED அனுப்பிய கடிதத்தையே இன்று வரை விசாரிக்காமல், கடிதம் வெளிவந்தது எப்படி என விசாரிக்கும் திமுக அரசின் பொம்மை காவல்துறை, இதையாவது விசாரிக்குமா? என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ