உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருப்பூர், 8 டிசம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு தூவானம் காந்தளூர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் அனைக்கு நீர்வரத்து தற்சமயம் வினாடிக்கு 950 கன
Amaravati Dam


திருப்பூர், 8 டிசம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு தூவானம் காந்தளூர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் அனைக்கு நீர்வரத்து தற்சமயம் வினாடிக்கு 950 கன அடிக்கு மேல் உள்ளதால் அமராவதி அணையில் ஆற்றுப்பகுதியில் உபரி நீர் 2000 கன அடிக்கு மேல் எந்த நேரத்திலும் திறந்த விட வாய்ப்பு உள்ளது.

இதனால் கரையோர கிராமங்களான கல்லாபுரம் ,ருத்ரா பாளையம், கொழுமம் குமரலிங்கம் மடத்துக்குளம் காரத்தொழுவு உட்பட 50-க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்கள் பாதுகாப்பன இடங்களுக்கு செல்ல நீர்வளத்துறை சார்பில் தற்பொழுது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் அமராவதி அணையின் மொத்த 90 அடியில் தற்பொழுது 85 .31 அடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர்வளத் துறை அதிகாரிகள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN