Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)
பணிக்கு வரும் தூய்மை பணியாளர்களை தடுத்தால் புகார் அளிக்க தொலைப்பேசியி எண்ணை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.
சென்னை மாநகராட்சி மண்டலம் -7 உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பணிக்குச் செல்லும் சில தூய்மை பணியாளர்கள் சீருடை அணியாமல் சாதாரண ஆடையில் பணிக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பணிக்கு சீருடைகள் வரும் தூய்மை பணியாளர்களை பணிக்கு வர விடாமல் தடுத்தாலோ, பணியை செய்யப்படாமல் தடுத்தால் உடனடியாக 9445190097 என்ற புகார் என்னை தொடர்பு கொண்டு புகார் அளிக்க மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் போது அவர்களுடைய தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ