Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)
வடஇந்தியாவில் குளிர் அதிகமாக நிலவி வருவதால் வெள்ளை கொக்குகள், சாம்பல் நிற பெரிய கொக்குகள் மற்றும் நாரை வகைகள் சென்னையை நோக்கி படையெடுத்து உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் தமிழகம் வருகின்றன, இந்த ஆண்டும் பறவைகள் வரத் தொடங்கிவிட்டன.
மேலும் இந்த முறை இவைகள் சென்னையை நோக்கி படையெடுத்துள்ளன.
குறிப்பாக வண்டலூர், போரூர், அடையாறு, கூவம் போன்ற இடங்கள் பறவைகளின் முக்கிய தங்குமிடங்களாக மாறியுள்ளன.
அந்த வகையில் சிவானந்தா சாலையை ஒட்டி செல்லும் கூவம் நதியில் வெளிநாட்டு பறவைகள் மற்றும் பல்வேறு விதமான பறவைகள் வருகை அதிகரித்துள்ளது.
கூவம் நதியில் மீன்களும் நீரும் இருப்பதால் பறவைகள் வசதியாக தங்கி உணவு தேடுகின்றன.
சென்னையில் உள்ள நீர்நிலைகளை சென்னை மாநகராட்சி சரியான நேரத்தில் தூர்வாரி சுத்தம் செய்துள்ளதே வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
ஏரிகள் நீர்நிலைகள் குளங்களை மாநகராட்சி சுத்தம் செய்து தூர்வாரியதால் ஏரிகளிலும் ஆற்றிலும் நீர் நிலை நன்றாக உள்ளது, மழைநீர் சரியாக தங்குகிறது, இந்த வேலை காரணமாக இந்த ஆண்டு பறவைகள் வருகை நிறைய அதிகரித்துள்ளது.
இப்படி பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் நீர்நிலைகள் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது.
Hindusthan Samachar / P YUVARAJ