Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 8 டிசம்பர் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் கிராமத்தில் உள்ள குளத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த சில பொதுமக்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மீன் பிடிக்க குளத்தில் வலை விரித்த நிலையில், அந்த வலையில் மீனுக்கு பதிலாக முதலை குட்டி ஒன்று சிக்கியுள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அதனை வலையுடன் சேர்த்து லாவகமாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
முதலை குட்டியை கரைக்கு கொண்டு வந்த பொதுமக்கள் அது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் முதலையை மீட்டு எடுத்துச் சென்றுள்ளனர். பொதுமக்களின் வலையில் சிக்கிய அந்த முதலை 5 அடி நீளமும், 30 கிலோ எடையும் கொண்டு இருந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலையை பிடிக்க வந்த வனத்துறையினரிடம் அந்த பகுதியில் ஒரு ராட்சத முதலை சுற்றித் திரிவதாகவும், அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதனை கேட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN