மே 17ம் தேதி ஜே இ இ பிரதானத் தேர்வு - தேர்வர்களுக்கான அறிவுறுத்தல்கள் வெளியீடு
சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.) இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக நடத
மே 17ம் தேதி ஜேஇஇ பிரதானத் தேர்வு  - தேர்வர்களுக்கான அறிவுறுத்தல்கள் வெளியீடு


சென்னை, 8 டிசம்பர் (ஹி.ச.)

இந்தியா முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும்.

இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படும். அதன்படி 2026ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி 21 முதல் 30ம் தேதி வரையும், ஏப்ரல் 1 முதல் 10ம் தேதி வரையும் நடைபெற உள்ளன.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு மே 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை நடப்பாண்டு ரூர்க்கி ஐஐடி நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் சேர்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலமாக ஒதுக்கப்படும்.

மேலும், கூடுதல் விவரங்களை https://jeeadv.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b