எம் பி கனிமொழியை கண்டித்து பாஜக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை, 8 டிசம்பர் (ஹி.ச.) திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி தீபம் ஏற்றாமல் தீர்ப்பையும் நீதிபதியும் அவமதித்த தமிழக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதி
Protest


கோவை, 8 டிசம்பர் (ஹி.ச.)

திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி தீபம் ஏற்றாமல் தீர்ப்பையும் நீதிபதியும் அவமதித்த தமிழக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் தமிழக அரசு மீதும், தீர்ப்பு மற்றும் நீதிபதி கனிமொழி எம்பியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

அப்போது தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Hindusthan Samachar / Durai.J