Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 8 டிசம்பர் (ஹி.ச.)
நாகை மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள்பட்ட அருந்தவம்புலம், ஆய்மூர், பன்னத்தெரு, மாராச்சேரி, தொழுதூர், புத்தூர், மணக்குடி, நீர்முளை, காடந்தேத்தி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட கனமழையால் பாதிப்புக்குள்ளான சம்பா மற்றும் தாளடிப் பருவ நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை எண்ம முறை அடிப்படையில் எடுப்பதை தவிர்த்து வழக்கம் போல பதிவேடுகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், வடிகள் ஆறுகளை முறையாக தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெறுகிறது.
இந்தப் போராட்டத்தால் கிழக்குக் கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் பிரதான வழித்தடத்தில் திங்கள்கிழமை காலை 10:45 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN