நாசிக் மாவட்டத்தில் கோர விபத்து -  600 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி
மும்பை, 8 டிசம்பர் (ஹி.ச.) மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று மாலை கல்வான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கா
நாசிக் மாவட்டத்தில் கோர விபத்து -  600 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து  6 பேர் பலி


மும்பை, 8 டிசம்பர் (ஹி.ச.)

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று மாலை கல்வான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர்.

கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 600 அடி பள்ளத்தாக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM