ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி 24 மணி நேரமாக தொடர்கிறது
திண்டுக்கல், 8 டிசம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே, பூசாரிபட்டியை சேர்ந்தவர் போஸ் என்பவர் மகன் ராஜ்குமார் (32) கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது. இந்நிலையில், ராஜ்குமார் உட்பட இவரது நண்பர்கள் நான்
River Death


திண்டுக்கல், 8 டிசம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே, பூசாரிபட்டியை சேர்ந்தவர் போஸ் என்பவர் மகன் ராஜ்குமார் (32) கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது.

இந்நிலையில், ராஜ்குமார் உட்பட இவரது நண்பர்கள் நான்கு பேர், நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் நிலக்கோட்டை அடுத்த, கூட்டாத்து அய்யம்பாளையம் என்ற இடத்தில் செல்லும் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கூலித்தொழிலாளர் ராஜ்குமார் என்பவரை தண்ணீர் இழுத்துச் சென்றுள்ளது. உடன் சென்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவர், வைகை ஆற்று தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கூலித்தொழிலாளி ராஜ்குமாரை தேடும் பணியில் நேற்று மதியம் முதல் தற்போது வரை 24 மணி நேரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து, நிலக்கோட்டை காவல்துறையினர், வைகை ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்ட ராஜ்குமார் ஆற்றில் ஏதாவது ஒரு இடத்தில் சிக்கியுள்ளாரா அல்லது நீரில் மூழ்கி இறந்து விட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN