Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 8 டிசம்பர் (ஹி.ச.)
நடைபெறவுள்ள மாநில பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பது உறுதி செய்யக்கோரி வழக்கறிஞர் எம்பி யோகமையா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் நீதிபதி ஜோய்மால்யா பக்ஷி மாலிய ஆகியர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பிறகு அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் தேர்தல் நடைபெறவுள்ள மாநில பார் கவுன்சில்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30% சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற மாநில பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களுக்கு அந்த 30% சதவீத இட ஒதுக்கீடு பதிலாக நடப்பாண்டில் 20% சதவீதம் இடஒதுக்கீட்டில் தேர்தல் நடத்தியும் 10% சதவீத இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் மாநில பார் கவுன்சிலில் பதவிவிலக்கு, பெரும் வழக்கறிஞர்களுக்கு பெதுமைத்துவம் 30%சதவீதம் என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Durai.J