Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத், 8 டிசம்பர் (ஹி.ச.)
தெலங்கானாவில் அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத்தின் மிக முக்கிய சாலைக்கு 'டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகத்திற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் டில்லியில் நடந்த இந்தியா - அமெரிக்கா நாடுகளின் மாநாட்டில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தின் முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலக நிறுவனங்களின் பெயர்களை சூட்ட இருப்பதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, முன்னணி நிறுவனங்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஹைதராபாத்தில் ரவிர்யாலாவில் நேரு வெளிவட்டச் சாலையை இணைக்கும் புதிய க்ரீன்பீல்டு சாலைக்கு, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. முன்னதாக ரவிர்யாலா மாற்று சாலைக்கு 'டாடா இண்டர்சேஞ்ச்' என்று பெயர் மாற்றப்பட்டது.
கூகுள் நிறுவனத்தை கவுரவிக்கும் விதமாக, ஹைதராபாத்தின் முக்கிய சாலைக்கு 'கூகுள் தெரு' என்று பெயரிடப்பட இருக்கிறது.
அதே போல, மைக்ரோசாப்ட் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் பெயர்களையும் சாலைகளுக்கு வைப்பது தொடர்பாக தெலங்கானா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM