Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 8 டிசம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் இன்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்த நிலையில், திடீரென நெஞ்சு வலியால் கதறி துடித்துள்ளார்.
இதை பார்த்த ஊழியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்த நிலையில், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அவரை ஊழியர்களை மீட்டு ஆட்டோவில் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தற்போது அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருந்த போதும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஒரு நபர் திடீரென நெஞ்சுவலியால் அலறித்துடித்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN