தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு!
தூத்துக்குடி, 8 டிசம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதிகளிலுள்ள மழை நீரை அகற்றக்கோரிய மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றிய பார் ரவி உள்ளிட்ட பலரை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்
தூத்துக்குடி


தூத்துக்குடி, 8 டிசம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதிகளிலுள்ள மழை நீரை அகற்றக்கோரிய மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றிய பார் ரவி உள்ளிட்ட பலரை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கையுடன் கிராம மக்கள் இன்று 08.12.2025 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் வடக்கு சோட்டையன்தோப்பு பகுதி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதோடு, பல்வேறு சமூகவிரோத செயல்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் பொன்பாண்டி (எ) பார் ரவியை ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய சகோதரரான முருகேசன் ஆகியோர் தனது சுயபாதுகாப்பில் மறைத்து வைத்துள்ளதோடு, பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 15 க்கும் மேற்பட்ட நபர்களை பாதுகாத்து வரும் மேற்படி எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய சகோதரரான முருகேசன் உள்ளிட்டோர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Hindusthan Samachar / Durai.J