Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 8 டிசம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் 14.11.2025 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரது மனைவி வசந்தி அவர்களும் 2017-ஆம் ஆண்டே உடல்நலக் குறைவால் காலமானார். இத்தம்பதியருக்கு 3 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைள் உள்ளனர்.
பெற்றோரை இழந்து தவிக்கும் நான்கு குழந்தைகளை முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார்.
அதன்படி, முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச 08) சென்னை தலைமைச் செயலகத்தில் மறைந்த கமலக்கண்ணனின் மகள் – செல்வி லாவண்யாவிற்கு ரூ.2,50,000/- மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,55,600/- மதிப்பீட்டில் வீடு கட்டுதவற்கு ஒதுக்கீடு ஆணை, சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினையும், மகள் செல்வி ரிஷிகா மற்றும் மகன் செல்வன் அப்னேஷ் ஆகியோருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2000/- நிதி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், மகள் செல்வி ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக ரூ.6,000/- உதவித்தொகை ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.
Hindusthan Samachar / vidya.b