புத்தாண்டையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்.பி.க்கள்
தமிழ்நாடு, 01 ஜனவரி (ஹி.ச.) உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முதலமைச்சர் - அமைச்சர் துரைமுருகன்


தமிழ்நாடு, 01 ஜனவரி (ஹி.ச.)

உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இந்த நிலையில் புத்தாண்டையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதன்படி ஆங்கில புத்தாண்டையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தேனாம்பேட்டையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ். ஜெகத்ரட்சகன், கனிமொழி, கலாநிதி வீராசாமி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் திமுகவை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்று சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam