100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றப்பட்டதால் என்ன? திமுகவுக்கு என்ன ஆகிவிடப் போகிறது - சசிகலா கேள்வி
சென்னை, 01 ஜனவரி (ஹி.ச.) சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் சசிகலாவை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்த தொண்டர்களை சந்தித்தார். பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சசிகலா கூறியதாவது:
சசிகலா


சென்னை, 01 ஜனவரி (ஹி.ச.)

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் சசிகலாவை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்த தொண்டர்களை சந்தித்தார்.

பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய சசிகலா கூறியதாவது:

இந்த புத்தாண்டில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலரும் ஆண்டாக இருக்கும் என்பது தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவை பொறுத்தவரை மக்களுக்கு எதிராகவே ஆட்சி செய்து வருகிறார்கள். இன்றைக்கும் அதே நிலை தான் சட்ட ஒழுங்கு சுத்தமாக சரியாக இல்லை என்பது வட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பே திருத்தணி ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞரை நான்கு சிறுவர்கள் கத்தியை வைத்து மிரட்டி காயப்படுத்தி உள்ளார்கள்.

இதுபோன்று எப்போது நடந்தது இல்லை ஆனால் திமுக ஆட்சியை வந்ததிலிருந்து தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை அதே திருத்தணியில் ரயில்வே நிலையத்தில் பட்டுப்புடவை வியாபாரியை சிறுவர்கள் அடித்து தொந்தரவு செய்து இருக்கிறார்கள்.

அதன் பிறகு போலீஸ் வருகிறார்கள் அனைத்தும் ஒரு வார காலத்தில் நடந்தது தான் சொல்வது.

திருப்பூரில் கோவில் திருவிழாவில் கிட்டத்தட்ட 500 பேர் வரிசையில் சுவாமி தரிசனம் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு இருந்தும் போதையில் ஒரு வாலிபர் ஹெட் கான்ஸ்டபிலை கத்தியை வைத்து மிரட்டி அடிக்க முயற்சி செய்திருக்கிறார். காக்கிச்சட்டை போட்டதற்கு அர்த்தம் இல்லாமல் இருக்கிறது. இந்த காவல்துறையை பொறுப்பேற்ற நடத்திக் கொண்டிருப்பது முதலமைச்சர் முதலமைச்சர் இதற்கு வாயை திறப்பதில்லை.

தமிழ்நாட்டில் அம்மா இருக்கும்போது காவல்துறை இப்படி இருந்தது. இப்போ எப்படி இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிகிறது.

இதிலிருந்து நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்பது தெரிகிறது.ரவுடிசத்தை குறைக்க முடியவில்லை. பட்டபகலில் நடக்கும் குற்றத்தை யாரிடம் சொல்வது.

இதனால் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் இந்த தேர்தலில் சரியான பாடத்தை திமுகவிற்கு கொடுத்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சி பக்கம் நோக்கி செல்வதை பார்க்க முடியும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் கிடைக்கும்.

அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பைலட் மாதிரி சீருடை வழங்கப்படும் என்று சொல்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஓட்டுநர்கள் ஆதிக தூரம் வாகனம் இயக்கச் சொல்கிறார்கள்.

எங்களுக்கு உறங்குவதற்கு அறைக்கூட இல்லை இதில் நாங்கள் எப்படி தூங்காமல் ஓட்ட முடியும் என்று கேட்கிறார்கள்.

அம்மா இருந்த காலத்தில் 10,900 பேருந்துகள் இயக்கப்பட்டது. அது இருந்தால் தான் ஒரு நாளைக்கு கோடியே 75 நபர்கள் பயணிப்பார்கள்.

எதை நம்பி ஏழை எளிய மக்கள் இருக்கிறார்கள். ஆனால் பொது மக்களுக்கு தேவையான பேருந்து வாங்க முடியவில்லை. அதேபோல் அரசு பேருந்து டயர் வெடித்து அதிகம் விபத்து ஏற்படுகிறது.

அம்மா ஆட்சி செய்த போது ஒரு பேருந்து வாங்கினால் மூன்று லட்சம் கிலோமீட்டர் ஓட வேண்டும் அப்படி ஓடிய பின்னர் புது பேருந்து மாற்றுவார்கள்.

ஆனால் திமுக அரசு வந்ததும் மூன்று லட்சம் கிலோமீட்டர் என்பதை 9 லட்சம் கிலோ மீட்டராக மாற்றிவிட்டது. ஒன்பது லட்சம் கிலோமீட்டர் ஓட்டினால் அந்த வண்டி எந்த நிலையில் இருக்கும் அதை நம்பி எப்படி பயணிகள் பயணிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam