சென்னை மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றம்!
சென்னை, 1 ஜனவரி (ஹி.ச.) சென்னை எழும்பூர் , மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை எழும்பூர் - மதுரை இட
சென்னை மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றம்


சென்னை, 1 ஜனவரி (ஹி.ச.)

சென்னை எழும்பூர் , மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் புறப்படும் நேரம் இன்று (வியாழக்கிழமை) முதல் மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு வந்த வைகை எக்ஸ்பிரஸ் இனி அரை மணி நேரம் முன்னதாக 1.15 மணிக்கே புறப்படும்.

இரவு 8.35 மணிக்கு மதுரையை சென்றடையும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM