புத்தாண்டிலும் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்
சென்னை, 01 ஜனவரி (ஹி.ச.) சம வேலைக்கு சம ஊதியம் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 1 வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, போராடி வரும் ஆசிரியர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் வ
புத்தாண்டிலும் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்


சென்னை, 01 ஜனவரி (ஹி.ச.)

சம வேலைக்கு சம ஊதியம் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 1 வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, போராடி வரும் ஆசிரியர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புத்தாண்டு தினமான இன்றும் (01-01-26) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2025ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2026ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக, இன்று நள்ளிரவு 12 மணி முதல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வாண வேடிக்கைகளுடன் கேக் வெட்டி கோலாகலமாக்க கொண்டாடி வருகின்றனர்.

உலகமே புத்தாண்டு தினத்தை கொண்டாடி வரும் சூழ்நிலையில், இன்றும் தங்களுடைய உரிமைக்காக சென்னையில் 7வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசியர்களை கட்டுப்படுத்த அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, போராட்டத்தை கைவிட மறுத்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.

எனினும், தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆசிரியர்களின் தொடர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b