Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 10 ஜனவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டம், அரசு இராசாசி மருத்துவமனையில் 4.37 கோடி ரூபாய் செலவில் மருத்துவ உபகரணங்கள்
மற்றும் உயர் மருத்துவ மேம்படுத்தப்பட்ட உடற்கூறாய்வு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,
திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பின் மதுரை அரசு இராசாசி தலைமை மருத்துவமனைக்கு
420 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், மதுரை அரசு இராசாசி தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளதாகவும் நாள்தோறும் உள்நோயாளியாக 3500 பேரும் வெளி நோயாளியாக 7000 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 934 நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள்
நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், இம்முகாம்களில் கடந்த வாரம் வரை 14,21,227 பேர்
பயனடைந்து உள்ளதாக கூறினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கட்டி முடிக்க மத்திய அரசை கோரிக்கை
வைக்கப்பட்ட தாகவும் மத்திய அரசின் அதிகாரியை அழைத்து கொண்டு ஜப்பான் சென்று நிதியை பெற நடவடிக்கை
எடுக்கப்பட்டதாகவும் விவரித்த அமைச்சர், அந்த வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam