அதிமுக சார்பில் பொங்கல் பரிசு - முண்டியடித்துக் கொண்ட மக்களால் தள்ளு முள்ளு
சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.) செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம் பகுதிகயில் 35வது வார்டு சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் சண்முகம் என்பவர் ஏற்பட்டில் குமரன் குன்றம் சந்திப்பில் 2000 நபர்
முண்டியடித்த மக்கள்


சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம் பகுதிகயில் 35வது வார்டு சார்பில்

எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் சண்முகம் என்பவர் ஏற்பட்டில் குமரன் குன்றம் சந்திப்பில் 2000 நபர்களுக்கு புடவை மற்றும் கரும்பு, பொங்கல் வைப்பதற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக ஏற்கனவே டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.

அப்பொழுது திடீரென பொங்கல் தொகுப்புடன் 200 ரூபாய் பணத்தை வழங்க ஆரம்பித்தனர்.

இதனை அறிந்த ஏராளமானவர்கள் பணத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பினை வாங்க கூட்ட கூட்டமாக வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் கூட்ட நெரிசலை கட்டுப்படுவதற்கு கடுமையாக திணறினர் கூட்டத்தில் வந்த வயதானவர்கள் பெரியவர்கள் கடுவு அவதி அடைந்ததோடு பெண்களின் தாங்கள் கொண்டு வந்த குழந்தைகளை கூடும் தொலைக்க ஆரம்பித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam