Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 10 ஜனவரி (ஹி.ச.)
75 ஆண்டு கால திராவிட கழகத்தை துடைத்து எறிந்தும் அடியோடு அழித்து விடுவோம்
என்ற உள்துறை அமைச்சரின் பேச்சு ஆணவத்தின் உச்சம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.
வைகோ மேற்கொண்டு வரும் சமத்துவ நடைபயணத்தின் 8ஆம் நாள் பயணமாக மதுரை மேலூர் நகர் பகுதியில் மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து மேலூர்
பென்னிகுவிக் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற
பொதுக்கூட்டதில் வைகோ பங்கேற்றார்.
இந்த பொதுக் கூட்டத்தில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான
கருணாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்க
ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய வைகோ,
முன்னெடுத்துச் செல்கின்ற கூரான அம்பாக திகழ்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை அடியோடு ஒழித்து விடுவோம் துடைத்து எறிந்து விடுவோம் இருக்கிற இடம் தெரியாமல் ஆக்கி விடுவோம் என பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே என்ன அகம்பாவம் இருந்தால், என்ன ஆணவம் இருந்தால், ஒரு 75 ஆண்டு இயக்கத்தை துடைத்து எறிந்துவோம் என பேசுவது, இது அரசியல் பேச்சு அல்ல... ஆணவத்தின் உச்சம்... உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கிறீர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தேர்தலில்
தோற்கடிப்போம் தாராளமாக பேசுங்கள் அது ஜனநாயகத்தில் இடம் உண்டு.
என்ன தைரியம் உங்களுக்கு
நரேந்திர மோடி பிரதமராக உள்ள தைரியத்தில, தமிழ்நாட்டில் நுழைந்து விடலாம் என்ற மனக்கோட்டை கட்டிக்கொண்டு பேசுகிறீர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நாங்கள் கூட்டணியில் இருப்பதால் இப்படிப்பட்ட ஆபத்துக்கள்
சூழ்ந்து வருகின்றன.
திராவிட இயக்கத்தின் மேல் படையெடுத்து வருகின்றனர்.
அதை தடுப்பதற்கு நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம்... ஆனால் எங்கள் பலத்தை எங்களுக்கு இருக்கக்கூடிய சக்தியை திராவிட முன்னேற்ற கழகத்தை காப்பதற்கு, தோளோடு தோள்
கொடுத்து பக்க பலமாக இருந்து இயங்குவோம் என்று கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam