ஜனவரி 28ம்‌ தேதி முதல்‌ ஏப்ரல்‌ 2ம்‌ தேதி வரை பட்ஜெட்‌ கூட்டத்தொடர்‌ - பார்லிமென்ட்‌ விவகாரத்துறை அமைச்சர்‌ கிரண்‌ ரிஜிஜு அறிவிப்பு
புதுடெல்லி, 10 ஜனவரி (ஹி.ச.) பார்லிமென்ட்‌ பட்ஜெட்‌ கூட்டத்தொடர்‌ ஜனவரி 28ம்‌ தேதி முதல்‌ ஏப்ரல்‌ 2ம்‌ தேதி வரை நடக்கும்‌ என பார்லிமென்ட்‌ விவகாரத்துறை அமைச்சர்‌ கிரண்‌ ரிஜிஜு தெரிவித்துள்ளார்‌. இது குறித்து அவர்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்‌ கூறிய
ஜனவரி 28ம்‌ தேதி முதல்‌ ஏப்ரல்‌ 2ம்‌ தேதி வரை பட்ஜெட்‌ கூட்டத்தொடர்‌ - பார்லிமென்ட்‌ விவகாரத்துறை அமைச்சர்‌ கிரண்‌ ரிஜிஜு அறிவிப்பு


புதுடெல்லி, 10 ஜனவரி (ஹி.ச.)

பார்லிமென்ட்‌ பட்ஜெட்‌ கூட்டத்தொடர்‌ ஜனவரி 28ம்‌ தேதி முதல்‌ ஏப்ரல்‌ 2ம்‌ தேதி வரை நடக்கும்‌ என பார்லிமென்ட்‌ விவகாரத்துறை அமைச்சர்‌ கிரண்‌ ரிஜிஜு தெரிவித்துள்ளார்‌.

இது குறித்து அவர்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்‌ கூறியிருப்பதாவது:

பார்லிமென்ட்‌ பட்ஜெட்‌ கூட்டத்தொடரை ஜனவரி 28ம்‌ தேதி முதல்‌ ஏப்ரல்‌ 2ம்‌ தேதி வரை நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்‌ அளித்துள்ளார்‌.

முதல்‌ கட்டம்‌ பிப்ரவரி 13ம்‌ தேதி முடிவடைகிறது. மார்ச்‌ 9ம்‌ தேதி பார்லிமென்ட்‌ மீண்டும்‌ கூடுகிறது.

மக்களின்‌ விருப்பங்களை நிறைவேற்றும்‌ விதத்தில்‌ ஆக்கப்பூர்வமாகவும்‌, அர்த்தமுள்ளதாகவும்‌ இந்த கூட்டத்தொடரை எதிர்நோக்குகிறோம்‌.

இவ்வாறு அவர்‌ குறிப்பிட்டுள்ளார்‌

Hindusthan Samachar / JANAKI RAM