Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 10)ஃபியட் செலக்ட் காரை கிழக்கு கடற்கரைச் சாலையில் தானே ஓட்டிச் சென்ற வீடியோவை தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீல நிறத்தினாலான ஃபியட் செலக்ட் காரை முதல்வர் ஓட்டிச் சென்றார். முன்னால் எஸ்கார்ட் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. அப்போது முதல்வர் கருப்பு பேன்ட், சிகப்பு நிற டீசர்ட் அணிந்திருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது எளிமையான வாழ்க்கை முறைக்காக அறியப்படுகிறார். சென்னை குளிரில் காலைப் பொழுதில் நடைபயிற்சி மேற்கொள்வது, கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் ஓட்டுவது போன்ற விஷயங்களை அவர் விரும்புவார். அவ்வப்போது காரில் உலா வருவதும் உண்டு.
அந்த வகையில், இன்று காலை அவர் தனது தனிப்பட்ட பயணத்திற்காக, பழமையான 'ஃபியட் செலக்ட்' காரை ஓட்டிச் சென்றார். முதல்வர் ஸ்டாலினுக்கு ஃபியட் கார்கள் மீது ஒரு எப்போதும் பிரியம் உண்டு.
இவ்வாறு டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b