Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 10 ஜனவரி (ஹி.ச.)
தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் கட்சியின் தூண்டிலில் சிக்கக் கூடாது என்று தேமுதிக மாநாட்டில் விஜயபிரபாகரன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தவெகவுடன் கூட்டணிக்கு வருவது போல் வந்து காங்கிரஸ் கட்சி பேரத்தை அதிகரித்து திமுகவிடம் சென்றுவிடும் என்றும் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
கடலூரில் தேமுதிக 2.0 மாநாடு நடைபெற்றது. பாசாரில் நடந்த இந்த மாநாட்டில் தேமுதிகவின் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் தவெக தலைவர் விஜய்க்கு ஒரு அட்வைஸை கொடுத்துள்ளார்.
விஜயபிரபாகரன் பேசுகையில்,
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் பிரச்சனை சென்று கொண்டு இருக்கிறது. அரசியலில் உங்களுக்கு நான் சீனியர்.
இதனை நீங்கள்தான் கூறினீர்கள்.
அந்த வகையில் ஒரு சிறிய அட்வைஸ்.
காங்கிரஸ் கட்சி அவர்களின் கூட்டணி பேரத்தை அதிகரிப்பதற்காக உங்களை ஆதரிக்கிறது.
அந்த ஆதரவை நம்பிவிடாதீர்கள். மீனுக்கு தூண்டில் போடுவது போல் போடுகிறார்கள்.
ஏனென்றால் விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியும்.
அவர்களை நம்பிவிடாதீரகள்.
கூட்டணிக்கு வருவதை போல் வந்து, உங்களை உசுப்பேற்றிவிட்டு, அவர்கள் அங்கேயே தான் இருப்பார்கள்.
அவர்களை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam