பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து இமாசல பிரதேச பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிப்பு
சிம்லா, 10 ஜனவரி (ஹி.ச.) இமாசல பிரதேசத்தின் சிர்மாவுர் மாவட்டத்தில் சிம்லா நகரில் இருந்து குப்வி நகர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று நேற்று 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் பலர் பலியானார்கள். பயணிகள் 30-க்கும் மேற்பட்டோருக்
பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து இமாசல பிரதேச பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிப்பு


சிம்லா, 10 ஜனவரி (ஹி.ச.)

இமாசல பிரதேசத்தின் சிர்மாவுர் மாவட்டத்தில் சிம்லா நகரில் இருந்து குப்வி நகர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று நேற்று 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இதில் பலர் பலியானார்கள். பயணிகள் 30-க்கும் மேற்பட்டோருக்கு காயமும் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், இழப்பீடும் அறிவித்து உள்ளார்.

இதன்படி பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM