Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜனவரி (ஹி.ச)
தமிழத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பேசப்படும் நபராக உள்ள ஹரி நாடார் தனது உடலில் அணிந்திருக்கும் நகைகளுக்காகவே ஃபேமஸ் ஆனவர். திரைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ள இவர் தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார்.
2கே அழகான காதல் என்ற படத்தை தயாரித்து நடித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது இது குறித்து எந்த அப்டேட்டும் இல்லை.
திரைத்துறையை போல் அரசியலிலும் களமிறங்கிய ஹரி நாடார், தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு, அ.தி.மு.க மற்றும் தி.மு.க வேட்பாளர்களுக்கு கடும் போட்டியாக விளங்கினார்.
இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இந்த தேர்தலில் 37627 வாக்குகள் பெற்ற இவர், சுயேச்சையாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமை பெற்றார்.
இதனிடையே அடிக்கடி மோசடி புகார் காரணமாக கைது செய்யப்படும் ஹரி நாடார் கடந்த சில ஆண்டுகளுக்க முன்பு, 16 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்ட இவரை பெங்களூரு போலீசார் விசாரணைக்காக அவரை பெங்களூருக்கு அழைத்து சென்றதாக தகவல் வெளியானது. தற்போது மீண்டும் ஒரு மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு வீரா்கள் குடியிருப்பில் வசித்து வரும், தொழிலதிபா் ஆனந்தகுமாா் தனது தொழில் தேவைக்காக ரூ.30 கோடி கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்ததை அறிந்த ஹரி நாடாரும், அவரது கூட்டாளிகளும் ஆனந்தகுமாரிடம், தாங்கள் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முன் பணமாக ரூ.70 லட்சம் தரும்படியும் கேட்டுள்ளனர். இதை நம்பிய ஆனந்தகுமாரும், ரூ.70 லட்சத்தை கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிய ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளிகள் சொன்னயபடி கடன் வாங்கித் தராத நிலையில், ஆனந்தகுமார் இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீஸாா் திருச்சி அருகே ஹரி நாடாா், அவரது கூட்டாளி பாலசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹரி நாடார் மீது பல தொழிலதிபர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கமிஷன் பெற்ற மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது அவர் மீண்டும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN