Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 10 ஜனவரி (ஹி.ச.)
நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன் கோள் ஆகும்.
இதுதான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். நமது பூமியை போல 1,300 பூமியை வியாழனில் அடக்கிவிடலாம் என்றால், அதன் அளவை
நீங்களே யோசித்துப்பாருங்கள். இந்த வியாழன் கோளை 75 க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதற்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 63.3 கோடி கிலோ மீட்டர் ஆகும்.
இந்த கோளின் நகர்வை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பிரம்மாண்ட கோள் தான் பூமிக்கு அருகில் வரவிருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
வியாழன் கோளானது பூமியை நோக்கி நெருங்கி வருவது தெரிய வந்துள்ளது. எனவே அதனை வெறும் கண்களால் கூட பார்க்க முடியும்.
சூரியன் மறைந்த பிறகு கிழக்கு திசையில் ஜெமினி விண்மீன் கூட்டத்துக்கு அருகில் இந்த கோளை காணலாம்.
அதேபோல் இன்று (சனிக்கிழமை) சூரியன், வியாழன், பூமி ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் காணப்படும்.
என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM