Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 10 ஜனவரி (ஹி.ச.)
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல் நத்தவனத்துப்பட்டி பகுதியில் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் நினைவு தினம் இன்று (ஜனவரி 10) அனுசரிக்கப்பட்டது.
வீர வணக்கம் மற்றும் குருபூஜை நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, எஸ்.பி. சண்முகநாதன், ராஜேந்திர பாலாஜி, வி.எம். ராஜலட்சுமி, சித. செல்லபாண்டியன், கிருஷ்ணமூரளி, குட்டியப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பசுபதிபாண்டியனின் நினைவிடத்தில் மலர்தூவி, தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினர்.
மேலும், தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மற்றும் மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பசுபதி பாண்டியர் மாநில பொதுச் செயலாளர் சந்தனபிரியா தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b