பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கோட்டை - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கோட்டை - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கோடை - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை, 10 ஜனவரி (ஹி.ச.)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கோட்டை - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06097) வருகிற 12ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06098) வருகிற 13 ம் தேதி மேட்டுப்பாளையம் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 4.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

போத்தனூரில் இருந்து செங்கோட்டை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06115) வருகிற 14ம் தேதி போத்தனூரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு போத்தனூரில் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06116) வருகிற 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூர் வந்து சேரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM