தனுஷ்கோடி கடலில் இரண்டு மீனவர்கள் கடலில் தவறி விழுந்து மாயம் - தேடும் பணி தீவிரம்
ராமநாதபுரம், 10 ஜனவரி (ஹி.ச.) பலத்த சூறைக்காற்றின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து, நம்புசாமி என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்
Fisherman


ராமநாதபுரம், 10 ஜனவரி (ஹி.ச.)

பலத்த சூறைக்காற்றின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து, நம்புசாமி என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், கிங்ஸ்டன், சரத்குமார், டைசன், டோனி, வெள்ளைச்சாமி, ஆகிய ஐந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று தனுஷ்கோடி அருகே மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, படகிலிருந்த சின்ன பாலம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் மற்றும் டைசன் இருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து

மீதமுள்ள மீனவர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலத்த சூறை காற்று கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்திருந்த இந்த சூழ்நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க சென்று இருவர் கடலில் தவறி விழுந்து மாயமான சம்பவம் மீனவர் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே அரசு தலையிட்டு மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சக மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN