Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 10 ஜனவரி (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் சட்டவிரோதமாக சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு கொடி கட்டியதாக கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி ஸ்தல விருட்சமாகிய கல்லத்தி மரத்தில் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கொடியினை மர உச்சியில் கட்டி உள்ளனர்.
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கொடி கட்டியதாக கோவில் நிர்வாகம் சார்பாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா அருகே தீபத்தூணில் விளக்கேற்றுவது தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு பதற்றம் உண்டான சூழலில் மீண்டும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பரங்குன்றம் இந்து சமய அறநிலைத்துறை உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவுக்கு 3 பிரிவின் கிழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam