வரும் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி அடையச் செய்யும் பெரும் சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது -பாஜகவின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின்
கோவை, 11 ஜனவரி (ஹி.ச.) கோவை மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டு சிற
பாஜக


கோவை, 11 ஜனவரி (ஹி.ச.)

கோவை மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாஜகவின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச். ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேடையில் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய நிதின் நபின்,

சக்தி கேந்திர நிர்வாகத்தின் வலுவான செயல்பாடுகளின் காரணமாகவே இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக தொடர்ந்து தேர்தல் வெற்றிகளைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.

எட்டு மாவட்டங்களில் இருந்து திரண்டு வந்துள்ள சக்தி கேந்திர பொறுப்பாளர்களின் எழுச்சியைப் பார்க்கும் போது, வரும் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி அடையச் செய்யும் பெரும் சக்தியாக இது உருவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததை நினைவு கூர்ந்த அவர், சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் தொடர்ந்து பணியாற்றி, திமுகவை வீழ்த்த அனைத்து நிலைகளிலும் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மேலும், சனாதனத்தை எதிர்க்கும் சக்திகளை தோற்கடிக்கும் வரை போராட்டம் ஓயக்கூடாது என்றும், சனாதனத்தையும் ராமரையும் இழிவாகப் பேசியவர்களுக்குப் பாடம் புகட்ட அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்து விரோத சக்திகளை முறியடித்து, பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத்திட்டங்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய மோடி அரசு சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய நிதின் நபின், தேச வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள சக்திகளை அடியோடு வீழ்த்த வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J