Enter your Email Address to subscribe to our newsletters

உசிலம்பட்டி, 11 ஜனவரி(ஹிச.)
தமிழர்களின் திருநாளான தை திருநாள் வரும் 15-ஆம் தேதி கொண்டாடப் படுகின்ற சூழலில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், அரசு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியில் பாஜக பிரச்சார பிரிவு சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரிசி,சர்க்கரை, நெய், ஏலக்காய், முந்திரி, கரும்பு உள்ளிட்டவைகள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை பாஜக மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.
தொடர்ந்து பெருமாள்கோவில்பட்டி ஊரணியில் 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் வேலை திட்டமாக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
Hindusthan Samachar / Durai.J