Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 11 ஜனவரி (ஹி.ச)
தாங்கள் முதலமைச்சராக பதவியில் இருந்த போது ஏன் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவில்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
எடப்பாடி பழனிசாமி திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டம் வழங்குவதாகக் கூறி அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை முதன் முதலில் ஒழித்துக் கட்டியது யாரு? உங்கள் அம்மா ஜெயலலிதா. 1.4. 2003 ஆம் ஆண்டே.
தாங்கள் முதலமைச்சராக பதவியில் இருந்த போது ஏன் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவில்லை.
தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையிலாவது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ஏன் கூறவில்லை? குறை சொல்ல மட்டும் தான் உங்களால் முடியுமே தவிர நிறைவேற்ற உங்களால் முடியாது.
10% ஊழியர் பங்களிப்பு என்பதைத் தவிர உங்களால் தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வு ஊதிய திட்டத்தில் வேறு எதை குறை கூற முடியும்? நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஒழித்துக் கட்டிய பிஜேபி யோடு கூட்டணி சேர்ந்துள்ள உங்களுக்கு அது குறித்து பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ