நாடு முழுவதும் விபி ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸார் உண்ணாவிரதப் போராட்டம்!
புதுடெல்லி, 11 ஜனவரி (ஹி.ச.) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வழி வகை செய்யும், வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்டத்துக்கு (விபி ஜி ராம் ஜி) எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வ
நாடு முழுவதும் விபி ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸார்  உண்ணாவிரதப் போராட்டம்!


புதுடெல்லி, 11 ஜனவரி (ஹி.ச.)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வழி வகை செய்யும், வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்டத்துக்கு (விபி ஜி ராம் ஜி) எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விபி ஜி ராம் ஜி-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காங்கிரஸார் இன்று (ஜனவரி 11) நாடு முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மேலும், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்காக, ஜனவரி 26 முதல் பிப்ரவரி 2 வரையில் ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் 5 முதல் 10 கி.மீ. தொலைவுக்கு காங்கிரஸார் நடைப்பயணம் மேற்கொள்வர்.

என்றும் அறிவித்திருந்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM