Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 11 ஜனவரி (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பொன்னகரம் மீனவ கிராமத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை
மூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், மூர்த்தி (45), மணிகண்டன்
(43), நாயகம் (40), மணி (40) ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை கடலுக்கு சென்றவர்கள் நேற்று சனிக்கிழமை
காலை கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் மதியம் ஆகியும் கரை திரும்பவில்லை.
இந்நிலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் தங்களது படகில் எரிபொருள் தீர்ந்து
நடுக்கடலில் தத்ததளிப்பதாக சக மீனவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து நேற்று மாலை 8 நாட்டுப்படகுகளில் சகமீனவர்கள் தேடச் சென்றுள்ளனர்.
நேற்று இரவு வரை தேடி கிடைக்காத நிலையில் இன்று 2 விசைப்படகுகளில் சக மீனவர்கள், கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் 15 பேர் கொண்ட குழுவினர் தேடுதல் பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால்
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையால்
அறிவிக்கப்பட்டு, கடந்த 7ம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லாமல் இருக்கின்ற நிலையில், தடையை மீறி கடலுக்குச் சென்று மீனவர்கள் மாயமாகியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam