Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில், இன்று (ஜனவரி 11) கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில், கடந்த இரண்டு நாட்களாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் நிலவரப்படி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, புதுக்கோட்டை மாவட்டம், ஆயிங்குடி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூரில் தலா ஒரு செ.மீ., மழை பெய்துள்ளது.
திரிகோணமலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கை திரிகோணமலை அருகில் நேற்று காலை நிலை கொண்டது.
பின்னர், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோர பகுதியில், திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது.
இதனால், தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழையும்; விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, அரியலுார், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழையும் நேற்று பெய்தது.
இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
விழுப்புரம் குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல், வரும் 13 முதல் 16ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும். சென்னை புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b