எலான்‌ மஸ்கின்‌ எக்ஸ்‌ வலைதள பக்கத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள குரோக்‌ ஏஜ சாட்பாட்‌ சேவைக்கு இந்தோனேசியா தற்காலிக தடை விதிப்பு
ஜகார்த்தா, 11 ஜனவரி (ஹி.ச.) எலான்‌ மஸ்கின்‌ எக்ஸ்‌ வலைதள பக்கத்துடன்‌ இணைக்கப்பட்டு உள்ள குரோக்‌ ஏஜ சாட்பாட்‌ சேவைக்கு இந்தோனேசியா தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இது குறித்து இந்தோனேசியாவின்‌ தகவல்‌ தொடர்பு மற்றும்‌ டிஜிட்டல்‌ துறை அமைச்சர்‌ மெதி
எலான்‌ மஸ்கின்‌ எக்ஸ்‌ வலைதள பக்கத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள குரோக்‌ ஏஜ சாட்பாட்‌ சேவைக்கு இந்தோனேசியா தற்காலிக தடை விதிப்பு


ஜகார்த்தா, 11 ஜனவரி (ஹி.ச.)

எலான்‌ மஸ்கின்‌ எக்ஸ்‌ வலைதள பக்கத்துடன்‌ இணைக்கப்பட்டு உள்ள குரோக்‌ ஏஜ சாட்பாட்‌ சேவைக்கு இந்தோனேசியா தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இது குறித்து இந்தோனேசியாவின்‌ தகவல்‌ தொடர்பு மற்றும்‌ டிஜிட்டல்‌ துறை அமைச்சர்‌ மெதியா ஹபீத்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்‌ கூறி உள்ளதாவது:

செயற்கை நுண்ணறிவானது தீங்கான செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்ற கவலை அதிகம்‌ உள்ளது. குறிப்பாக, பெண்கள்‌, குழந்தைகள்‌ உளவியல்‌ ரீதியாக பாதிக்கப்படாமல்‌ தடுக்கவே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர்‌ மெதியா ஹபீத்‌ கூறி உள்ளார்‌.

மேலும்‌ எக்ஸ்‌ வலைதளத்திடம்‌ குரோக்‌ ஏஐ மூலம்‌ ஏற்படும்‌ விளைவுகள்‌ குறித்து இந்தோனேசியா விளக்கமும்‌ கேட்டுள்ளது.

தடை அறிவிப்பின்‌ மூலம்‌ ஏஜயை ஏற்க மறுத்த முதல்‌ நாடு என்ற பெயரை இந்தோனேசியா பெற்றுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM