Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்தியாவின் முதல் ‘ஐயன்மேன் 5i50 டிரையத்லான் சென்னை’ (Ironman 5i50 Triathlon) மற்றும் ‘டுயோஸ்கா டூயத்லான்’ (Duoska Duathlon) போட்டிகள் இன்று சென்னையில் உற்சாகமாகத் தொடங்கின.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஎம் பீச் ரிசார்ட்யில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘ஐயன்மேன்’ பந்தயத்தின் ஒரு பகுதியாக, 5i50 ரகப் போட்டி இந்தியாவில் முதன்முறையாகச் சென்னையில் நடத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் நீச்சல், மிதிவண்டிப் பயணம் மற்றும் ஓட்டம் ஆகிய மூன்று சவால்களை உள்ளடக்கியது
கடல் சிட்டத்தின் காரணமாக நீச்சல் நீச்சல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதில் இந்தியா முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இத்தகைய சர்வதேசப் போட்டிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
இந்தத் தொடக்க விழாவின் போது அரசு உயர் அலுவலர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்த போட்டியின் முதல் காரணமாக கானத்தூர் மாயாஜால் திரையரங்கம் முதல் முட்டுக்காடு வரை ஒரு வழி பாதியாக மாற்றப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ