Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 11 ஜனவரி (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பெருந்தை விருத்தாசலம் அருகே உள்ள கோவிலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் மடப்பட்டு இடையே சென்று கொண்டிருந்த பொழுது, அந்த வழியாக சென்ற சுற்றுலா வேன் ஒன்று பேருந்தின் பக்கத்தில் உரசுவது போல் அதிவேகமாக சென்றது.
இதனையடுத்து அந்தோணிராஜ், பேருந்தை வேகமாக ஓட்டி சென்று வேன் முன்பாக நிறுத்தி வேனில் இருந்தவர்களிடம், ஏன் அரசு பேருந்து மீது உரசுவது போல் வேனை ஓட்டி சென்றீர்கள்? என்று தட்டி கேட்டுள்ளார். அப்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சுற்றுலா வேனில் பயணம் செய்த சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (வயது 36) என்பவர் கையால் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அந்தோணி ராஜ் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடி தலைமறைவான சென்னை காசிமேடு லிங்கேஸ்வரனை கைது செய்து, அவர் மீது பொது சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN