கேரளத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது!
திருவனந்தபுரம், 11 ஜனவரி (ஹி.ச.) கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் எம்எல்ஏ-வான ராகுல் மாம்கூட்டத்தில் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கருக் கலைப்பு என இர
கேரளத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில்  கைது!


திருவனந்தபுரம், 11 ஜனவரி (ஹி.ச.)

கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காங்கிரஸ் எம்எல்ஏ-வான ராகுல் மாம்கூட்டத்தில் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கருக் கலைப்பு என இரு வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இருப்பினும், முதல் வழக்கில் அவருக்கு கைது நடவடிக்கையிலிருந்து இடைக்காலத் தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்ந்து, இரண்டாவது வழக்கிலும் ராகுலுக்கு முன்பிணை வழங்கி திருவனந்தபுரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, பாலியல் வழக்குகள் காரணமாக ராகுலை கட்சியிலிருந்து காங்கிரஸ் நீக்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், ராகுல் மாம்கூட்டத்தில் மீது மூன்றாவது வழக்காக பத்தனம்திட்டாவை சேர்ந்த ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

மூன்றாவது வழக்கில்தான், ஒரு விடுதியில் தங்கியிருந்த ராகுல் மாம்கூட்டத்திலைநேற்று (சனிக்கிழமை)நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஏற்கெனவே உள்ள இரு வழக்குகளை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM