Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 11 ஜனவரி (ஹி.ச.)
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு உட்பட்ட காக்க நாடு பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவரின் மகன்
சம்பத் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவன் தனது பள்ளி பை கனமாக இருந்துள்ளது இது குறித்து தந்தைக்கு தெரிவித்துள்ளார்.
பையை சோதனை செய்தபோது நாகப் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை
கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்.
இது குறித்து உடனடியாக
வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் வனத்துறையின் பாம்பு
மீட்பு குழுவினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு பாம்பை பிடித்து சென்று
அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.
9-ஆம்வகுப்பு சிறுவனின் பள்ளி பையில் நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam