Enter your Email Address to subscribe to our newsletters

கொடைக்கானல், 11 ஜனவரி (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் வனத்துறை கட்டுபாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் ஆன குணா குகை ,தூண் பாறை, மோயர் சதுக்கம், பைன் மரக் காடுகள், பேரிஜம் ஏரி ஆகிய பகுதி செல்வதற்கு வனத்துறையினர் தற்போது சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டு டிக்கெட் வழங்கி வரும் நிலையில் தற்போது இந்த பகுதிகளுக்கு செல்வதற்கு பணம் வசூலிப்பதை தவிர்த்துவிட்டு இணைய வழி phone pay, g pay மூலமாக மட்டுமே பணம் வசூலிக்கப்படும் என்றும் பணம் வாங்க முடியாது என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் பணம் பெற்று செல்லும் நிலையில் சில்லறை கொடுக்கும் நிலையில் இந்த பகுதியில் நீண்ட கால தாளதானதம் ஆவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஆவதாகவும், அதே போல கூடுதலான பணியாட்கள் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தற்போது தூண்பாறை பகுதியில் உள்ள நுழைவு வாயிலில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அப்பகுதியில் நெட்வொர்க் பற்றாக்குறை காரணத்தால் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் இணைய வழி மூலம் பணம் வசூலிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அடிக்கடி சிக்னல் பிரச்னைகள் ஏற்படும் சூழலில் ஆன்லைன் டிக்கெட் என்பது எந்த அளவிற்கு சாத்தியக்கூறு என்பது பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.
Hindusthan Samachar / GOKILA arumugam