Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 11 ஜனவரி (ஹி.ச.)
அரியலூர் மாவட்ட திமுக சார்பில் திராவிட பொங்கல் எனும் தலைப்பில் மாவட்ட
அளவிலான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.
பின்னர் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்ததாவது;
கடந்த காலங்களில் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தோர், தற்பொழுது அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர்.
நீண்ட தூர பயணங்களுக்கு அரசு பேருந்துகள் இல்லாத ஊர்களுக்கு வேண்டுமானால், ஆம்னி
பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது இருந்திருக்கலாம்.
அது குறித்து இதுவரை
எந்த புகாரும் முறையாக வரவில்லை. புகார் வருகின்ற பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியிலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, கட்டண உயர்வு குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஆய்வில் கட்டண உயர்வு குறித்து தெரிய வந்தால் உடனடியாக நடவடிக்கை
எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam