Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 ஜனவரி (ஹி.ச.)
கோவையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், கோவையில் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களான பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் மருதமலை முருகன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
கட்சி வளர்ச்சிப்பணிகள் உடன் தமிழக கலாச்சார விழாக்களிலும் அவர் பங்கேற்று வருவது தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று கோவை வருகை தந்த நிதின் நபின் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
பாஜகவை வலுப்படுத்துவது புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் எதிர்வரும் அரசியல் நகர்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பழமை வாய்ந்த பேரூர் கோவில் பட்டீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார்.
பின்னர் கோவில் யானை கல்யாணிக்கு வாழைப்பழம் வழங்கிய ஆசி பெற்றார்.
முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலைக்கு சென்று சுப்பிரமணிய சுவாமி வழிபட்டார்.
இவரின் வருகையையொட்டி கோவில் வளாகம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு நிதின் நபின் வடவள்ளி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தமிழர்களின் பாரம்பரிய உடைகள் வந்திருந்த அவர் பொங்கல் விழாவில் தமிழனின் பண்பாடு மற்றும் கலைகள் குறித்து பொதுமக்கள் இடையே உரையாற்றினார்.
அவருடன் பா.ஜ.க மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை முக்கிய கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Hindusthan Samachar / Durai.J