Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜனவரி (ஹி.ச.)
தனது பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற பட்டத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி–சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
நீயே விடை என்ற நிறுவனம் மட்டுமல்லாமல் வேறு எந்த நிறுவனங்களும், தனது பெயர், புகைப்படம், பட்டங்களையும், வசனங்களையும் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ